The Thuggee.. Professional Assassins - மணிரத்னம் கையிலெடுக்கும் வித்யாசமான கதைக்களம்? சுவாரசிய தகவல் இதோ!
Kamalhaasan Thug Life : உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சரியாக 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் Thug Life என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை திரிஷா, ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளனர்.
Thug Life
இந்த படம் குறித்த தகவல் நேற்று வெளியானதில் இருந்து இணைய வாசிகள் இது என்ன கதையாக இருக்கும் என்பது குறித்த யூகங்களை துவங்கியுள்ளனர். நேற்று வெளியான வீடியோவில் உள்ள தகவலின்படி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய கதாபாத்திரத்தின் பெயர் "ரங்கராய சக்திவேல் நாயகர்" என்பதாகும்.
Thuggee
காயல்பட்டினம் பகுதியில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் உலக நாயகன் ஒரு கேங்ஸ்டர் ஆக நடிக்க உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் Charles River Editors புத்தக நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட "The Thuggee : The History of the Thugs, the world's First Organized Gang of Professional Assassin's" என்ற புத்தகத்தை தழுவி தான் இந்த கதை உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதாவது சுமார் 15ம் மற்றும் 20ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சில கேங்ஸ்டர் பற்றிய கதையாக இது அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில், இந்திய மண்ணில் இந்த கேங்ஸ்டர்கள் வாழ்ந்து வந்ததாகவும், உலக அளவில் ஒரு குழுவாக செயல்படும் மிகவும் நேர்த்தியான அசாசின்களாக இவர்கள் திகழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
Ulaga nayagan Kamalhaasan
ஆகவே அந்த அசாசின்களில் ஒருவர் தான் கமல்ஹாசன் என்றும், இதை அடித்தளமாகக் கொண்டுதான் மணிரத்தினம் கதையை இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.