Goat: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம விருந்து! அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட் குஷியான ஃபேன்ஸ்!
தளபதி விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தில் இருந்து நாளை முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.
தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'GOAT'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது இப்படம் குறித்த தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை உச்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்த பொங்கல் திருவிழாவை மேலும், சிறப்பாக்கும் விதத்தில் அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்வீட் தான் தற்போது செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.'GOAT' பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து, ’அர்ச்சனா கல்பாத்தி அவர்களே, ’கோட்’ படத்தின் பொங்கல் சிறப்பு விருந்து உண்டா? என்று கேட்க, அவரும் ’கண்டிப்பாக உண்டு, இந்த பொங்கல் தளபதி பொங்கல் தான்’ என தெரிவித்துள்ளார்.
Goat Poster Dhoni
இதையடுத்து நாளை பொங்கலை மேலும் சிறப்பாக்கும் விதத்தில், 'கோட்' படத்தின் தரமான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே புத்தாண்டை முன்னிட்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் சமூக வலைத்தளத்தில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், நாளை என்ன தகவல் வெளியாகும் என எப்போது டீப் டிஸ்கஷனில் இறங்கி உள்ளனர்.
விஜய் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகும் இந்த படத்தில், தளபதியுடன் சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்ற்னர். இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுதிரியும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.