Vijay Photos: ஆடி, BMW கார்ல வலம் வந்த விஜய்க்கு இந்த நிலையா? ரஷ்ய சாலைகளில் தளபதி எப்படி போறாருனு பாருங்க!
தளபதி விஜய் தற்போது, 'கோட்' படப்பிடிப்புக்காக , ரஷ்யா சென்றுள்ள நிலையில்... அங்கு லெக் புஷ் ஸ்கூட்டரில் பயணித்த வீடியோ மற்றும் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'கோட்'. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் கடந்த வாரம், துபாய் புறப்பட்டு சென்றார்.
சில தினங்கள் துபாயில் 'கோட்' பட காட்சி படமாக்கப்பட்டது. இதை தொடர்ந்து படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கிருந்தபடி, இயக்குனர் வெங்கட் பிரபு அர்ச்சனா கல்பாத்தி சகோதரிகளுடன் வெளியிட்ட வீடியோ வைரலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தளபதி விஜய் ரஷ்யாவில் உள்ள சாலையில், லெக் புஷ் ஸ்கூட்டரில் ரைட் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கோட் சூட்டில், செம்ம ஹான்சமாக இருக்கும் விஜய்... ஒரு குழந்தை போல் துறுதுறுவென இந்த லெக் புஷ் ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களின் லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதே நேரம் பொதுவாக தளபதி காஸ்லியான காரில் தான் சென்னை சாலைகளில் வலம் வருவார்... ஆனால் ரஷ்ய சாலையில் இப்படி லெக் புஷ் ஸ்கூட்டரில் செல்கிறாரே என சிலர் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.
தளபதி தன்னுடைய ஒவ்வொரு படத்திலும், ரசிகர்களை சந்தோஷ படுத்தும் விதமான சாகசங்களை செய்ய தவறுவது இல்லை. அதே போல், இந்த முறை இப்படத்தில் இந்த ஸ்கூட்டர் வைத்து ஏதேனும் சேசிங் காட்சி இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாகி வரும் இந்த படத்தில், தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா விஜக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ள நிலையில், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடித்துள்ளார். மேலும் லைலா, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், விஜய் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய கடைசி படத்தை நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போதே துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.