தாய்லாந்தில் Muay Thai Boxing பயிற்சி.. அசத்தும் "தளபதியின் நாயகி" மீனாட்சி சவுத்ரி - படத்துக்காகவா?
Actress Meenakshi Chaudhary : பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் "The Greatest of All Time" திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி.
Actress Meenakshi
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவங்கிய மீனாட்சி, தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான விஜய் ஆண்டனியின் "கொலை" திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
Actress Meenakshi Chaudhry
அதேபோல இந்த 2024ம் ஆண்டு பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான "சிங்கப்பூர் சலூன்" என்கின்ற திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரை உலகில் இவ்வாண்டு பல திரைப்படங்களில் நடித்துவரும் அவர் தற்பொழுது தளபதி விஜய் அவர்களுடன் நடித்து வருகிறார்.
Meenakshi
இந்நிலையில் அவர் தாய்லாந்து நாட்டிற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு அவர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விசேஷ நிகழ்வில் கலந்து கொண்டு, அந்நாட்டின் மிகவும் தொன்மையான கலைகளில் ஒன்றான Muay Thai பாக்சிங் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.