மாஸ் பேச்சில் தெறிக்கவிட்ட தளபதி.. லியோ பட வெற்றி விழாவை எப்போது டிவியில் காணலாம்? - வெளியான தகவல்!
Leo Movie Success Meet in TV : நேற்று சென்னையில் லியோ திரைபட வெற்றிவிழா கோலாகலமாக நடைபெட்றது, தளபதி விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த பல விஷயங்கள் அதில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த வெற்றி விழா குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Thalapathy vijay
தளபதி விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள், நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்து கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலக அளவில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் லியோ.
Super Star விவகாரம்.. "ஒரே ஒருத்தர்தான் சூப்பர் ஸ்டார்" சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்
Trisha
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் என்ற வசூலை தாண்டி தற்பொழுது பயணித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Arjun
இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தினுடைய வெற்றி விழாவானது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வழக்கம் போல இதில் பங்கேற்று பேசிய தளபதி விஜய் அவர்கள், திருக்குறளில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரியை கூறி ரசிகர்களை மகிழ்வித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொடங்கி மன்சூர் அலிகான் வரை பலரும் தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் என்ட்ரி குறித்து பல விஷயங்களை பேசியது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது மக்கள் இந்த லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி எப்பொழுது டிவியில் ஒளிபரப்பாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Thalapathy vijay Leo Movie
இந்நிலையில் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில், வருகின்ற தீபாவளி திருநாள் ஆண்டு லியோ பட வெற்றி விழா நிகழ்ச்சி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D