T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை டிராபியுடன் விதவிதமாக போஸ் கொடுத்த ரோகித் சர்மா – வைரல் போட்டோஸ்!
டி20 உலகக் கோப்பை டிராபியுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டோஷூட் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
T20 World Cup 2024
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
T20 World Cup 2024
இந்த 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 30 அம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
T20 World Cup 2024
மேலும், ரிசர்வ் பிளேயர்ஸாக ரிங்கு சிங், சுப்மன் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அமெரிக்காவிலேயே நடத்தப்பட இருக்கிறது.
T20 World Cup 2024
இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிவுக்கப்பட்டு விளையாடுகின்றன. அதில்,
குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா.
குரூப் பி – இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
குரூப் சி – வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து
குரூப் டி – தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள்.
T20 World Cup 2024
இந்தியா விளையாடும் போட்டிகள்:
ஜூன் 5 – இந்தியா – அயர்லாந்து – நியூயார்க்
ஜூன் 9 – இந்தியா – பாகிஸ்தான் – நியூயார்க்
ஜூன் 12 – இந்தியா – அமெரிக்கா – நியூயார்க்
ஜூ 15 – இந்தியா – கனடா – புளோரிடா
குரூப் ஏ பிரிவில் சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி ஒவ்வொரு குரூப்பிலிருந்து மொத்தமாக 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
T20 World Cup trophy
இந்த 8 அணிகளும் 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்ற 3 அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதில், தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
Indian Team Practice
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டனர். நாளை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் வார்ம் அப் போட்டியில் விளையாடுகின்றன. இந்த நிலையில் தான் ரோகித் சர்மா உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்துள்ளார். விதவிதமாக போஸ்ட் கொடுத்து போட்டோஷுட் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.