Toll Plaza: இந்த 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது! எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
தமிழ்நாட்டில் கல்லக்குடி, வல்லம் உள்ளிட்ட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
Toll Plaza
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
Toll Plaza Price Hiked
ஆனால் மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதையடுத்து கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.
இதையும் படிங்க: TN Government School:அரசு பள்ளிகளில் ஜூன் 2வது வாரம் முதல்! மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை
Tamilnadu Toll Plaza
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக ஆத்தூர், பரனூர்,சூரப்பட்டு, வானகரம், பட்டரைபெரும்புதூர், வல்லம், கல்லக்குடி, இனாம்காரியந்தல், மணகெதி உள்ளிட்ட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.