வருண் அல்லது நட்டு – டிராபியை வெல்லப் போகும் அந்த தமிழன் யார்? டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
சென்னையின் கோட்டையான எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடந்த 2016 ஆம் ஆண்டு டிராபியை கைப்பற்றியது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இதே போன்று 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டிராபியை வென்றது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் டிராபியை வெல்லப் போகும் அணி எது என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதற்கான தருணம் தற்போது வந்துவிட்டது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இன்றைய போட்டியில் கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஹைதராபாத் அணியில் ஷாபாஸ் அகமது கொண்டு வரப்பட்டுள்ளார். அப்துல் சமாத் இம்பேக்ட் பிளேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, எய்டன் மார்க்ரம், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், டி நடராஜன்.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இந்த சீசனில் கொல்கத்தா விளையாடிய குவாலிஃபையர் 1 உள்பட 15 போட்டிகளில் 10ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், 2 போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிஃபையர் 1 மற்றும் குவாலிஃபையர் 2 உள்பட விளையாடிய 16 போட்டிகளில் 9 வெற்றி 6 தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இந்த 2 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
இந்தப் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளும் முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் கேகேஆர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3ஆவது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, Final
நேற்று சென்னையில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கேகேஆர் அணியானது பயிற்சி போட்டியை ரத்து செய்தது. ஆனால், இன்று சென்னையில் வானம் தெளிவாக இருக்கும் நிலையில் மழை பெய்ய வாய்ப்பில்லை. ஆதலால் போட்டி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.