உங்க முகம் குழி குழியா பாக்க அசிங்கமா இருக்குதா..? அப்ப 'இந்த' ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க..
Open Pores Face Pack : முகத்தில் திறந்து இருக்கும் துறைகளைப் போக்க சில ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். அது சரும துகள்களை அடைப்பது மட்டுமின்றி, சருமத்தை பட்டுப்போல மென்மையாக மாற்றும்.
பெரும்பாலானோர் அழகான, மென்மையான மற்றும் சம சீரான சருமத்தை விரும்புகிறார்கள். ஆனால், அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பலரது முகம் ஆங்காங்கே குழி குழியாக சமச்சீரற்று, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். காரணம், சருமத்துளைகள் மூடி இருக்காமல், திறந்து இருப்பதால் தான்.
மேலும் சருமத்துள்ளீர்கள் இப்படி திறந்து இருப்பதற்கு காரணம் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, முதுமை சூரிய ஒளி பாதிப்பு, அழுக்குகள் குவிந்து இருப்பது மற்றும் சருமத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை ஆகும். இன்னும் சிலருக்கோ மரபியல் காரணங்களால் கூட இந்த பிரச்சனைகள் ஏற்படும்.
சருமம் இப்படி திறந்திருந்து குழி குழியாக இருந்தால் பார்ப்பதற்கு முதுமையாக தோன்றுவோம். ஆனால், சில ஃபேஸ் பேக்களின் உதவியுடன் திறந்திருக்கும் சரும துகள்களை அடைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமமும் பட்டுப்போல மென்மையாக மாறும். எனவே, இந்த கட்டுரையில் அந்த ஃபேஸ் பேக்குகள் என்னென்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
முட்டையின் மற்றும் எலுமிச்சை சாறு: முட்டையின் வெள்ளை கருவை உங்கள் முகத்தில் தடவினால் அது உங்கள் சருமத்தை இருக்கமாக்குவதோடு, எண்ணெயையும் கட்டுப்படுத்தும். மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் செய்ய முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவும்.
மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்: மஞ்சள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது சருமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இந்த ஃபேஸ் பேக்கை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் ரோடு வாட்டர் சேர்த்து நன்கு கலந்து, பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவும். இந்த ஃபேஸ் பேக்கில் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை போடலாம்.
வாழைப்பழத்தோல்: வாழைப்பழ தோளிலிருந்து தயாரிக்கப்படும் பேஸ் பேக் திறந்து இருக்கும் சரும துளைகளை விரைவில் அகற்றும் மற்றும் சருமத்தை இறுக்கமாக்கும். இதற்கு வாழைப்பழத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து பிறகு தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: எண்ணெய் சருமத்தால் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்காக பெஸ்ட் 4 ஃபேஸ் பேக்.. கண்டிப்பா ஒன்னு ட்ரை பண்ணி பாருங்க!
எலுமிச்சை மற்றும் தேன்: முகத்தில் திறந்திருக்கும் சரும துளைகளே அகற்ற எலுமிச்சை மற்றும் தேன் உதவியாக இருக்கும். எலுமிச்சை சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி முகப்பருவையும் நீக்கும். இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.
இதையும் படிங்க: பச்சை பாலில் இந்த மூணுல ஏதாவது ஒன்னு கலந்து யூஸ் பண்ணுங்க.. முகம் பளபளப்பாகுமாம்..!
பப்பாளி: பப்பாளி சருமத்திற்கு நல்ல பலன்களை தரும். இதற்கு பப்பாளியை மிக்ஸியில் அரைத்து அந்த பேஸ்ட் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது முகத்தில் திறந்த துறைகளை மூடவும், சருமத்தை பளபளப்பாக்கவும் உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D