முடிவுக்கு வந்த 14 வருட திருமண வாழ்க்கை... ஷில்பா ஷெட்டியை விவாகரத்து செய்துவிட்டதாக ராஜ்குந்த்ரா அறிவிப்பு
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டியும் தானும் பிரிந்துவிட்டதாக ராஜ் குந்த்ரா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Raj kundra, Shilpa Shetty
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான இவர், கடைசியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அதன்பின் அவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை.
Raj kundra, Shilpa Shetty divorce
பின்னர் பாலிவுட்டில் பிசியாக இருந்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நடிப்பை தாண்டி நடிகை ஷில்பா ஷெட்டி பிசினஸும் செய்துவந்தார். ஐபிஎல்லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முதலில் வாங்கியது அவர் தான். அவர் வாங்கிய அந்த அணி முதல் சீசனிலேயே கப் ஜெயித்தது. பின்னர் சில ஆண்டுகளில் அதனை விற்றுவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
shilpa shetty husband Raj kundra
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் கைதானார். ஆபாச படங்களை தயாரித்து அதனை ஆன்லைனில் வெளியிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்திலேயே ஷில்பா ஷெட்டி அவருடன் சண்டையிட்டு விவாகரத்து கேட்டதாக செய்திகள் வெளியானது.
Raj Kundra X post
ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்ததும் இருவரும் ஜோடியாக வலம் வந்து விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனால் தற்போது தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி ராஜ்குந்த்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஷில்பா ஷெட்டி உடனான விவாகரத்தை உறுதி செய்துள்ளார். ராஜ் குந்த்ராவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படியுங்கள்... தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... துணிவு படத்தின் லைஃப் டைம் கலெக்ஷனை ஒரே நாளில் காலி பண்ணிய லியோ!