Asianet News TamilAsianet News Tamil

ரவுடியை கோர்ட்டில் வைத்து தூக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட திமுக நிர்வாகி! இடையில் புகுந்து சுத்து போட்ட போலீஸ்!

சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

Rowdy has a plan to kill.. .. 6 people including DMK executive arrested in Chennai tvk
Author
First Published May 8, 2024, 3:45 PM IST

சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை கொலை செய்ய‌ திட்டமிட்ட திமுக நிர்வாகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். 

இதையும் படிங்க: வாத்தியார் வக்கிர புத்தி.. 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்.. சிக்கியது எப்படி?

இதனையடுத்து காவல் நிலையத்தில் அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் யஸ்வந்த் ராயன், பிரான்சிஸ், கோகுல்நாத், கார்த்திக்,  கார்த்திகேயன், ஜெய்பிரதாப் என்பது தெரியவந்தது.  இதில் யஸ்வந்த் ராயன் திமுகவில் ஓட்டேரி மங்களபுரம் பகுதி சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் வைத்து யஸ்வந்த் ராயனை சரண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. ஏற்கனவே சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: சிகரெட்டால் சூடு! கணவனை கட்டிப் போட்டு கதற விட்ட மனைவி! வீடியோவுடன் வசமாக சிக்கிய பெண்ணை தட்டித்தூக்கிய போலீஸ்

வெட்டியதில் படுகாயத்துடன் யஷ்வந்த் உயிர் தப்பினார். இது தொடர்பாக அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரண் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியே வந்த சரணை கொலை செய்ய யஸ்வந்த் ராயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 பட்டாக்கத்திகள், 3 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios