ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 150 கி.மீ வரை பயணிக்கலாம்.. ஷேமா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
ஷேமா எலக்ட்ரிக் இரண்டு அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை பயணிக்கலாம்.
எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஷேமா எலக்ட்ரிக், ஈகிள்+ மற்றும் டியுஎஃப்+ என பெயரிடப்பட்ட அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ஷேமா எலக்ட்ரிக்-ன் (Shema Electric) இந்த இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் Hero Electric Optima மற்றும் Ampere போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் Hero Electric இன் Optima CX 5.0 விலையில் ரூ. 1.3 லட்சம், ஆம்பியர் மேக்னஸ் EX (எக்ஸ்-ஷோரூம் ரூ. 98,900) மற்றும் ஒகாயாவின் FAAST F2F (எக்ஸ்-ஷோரூம் ரூ. 93,990) ஆகியவற்றுடன் போட்டியிடும்.
விலையைப் பொறுத்தவரை, ஷேமா எலக்ட்ரிக் ஈகிள்+ விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம், அதேசமயம் TUFF+ விலை சற்று சிக்கனமானது. ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் எக்ஸ்ஷோரூம் விலையில் TUFF+ உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இருப்பினும், இந்த விலைகள் FAME-II மானியம் பயன்படுத்தப்பட்ட பிறகு. தற்போது TUFF+ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திலும், ஈகிள் பிளஸ் ரூ.117,199 எக்ஸ்ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்கூட்டர்களிலும் ப்ளூடூத் ஸ்பீக்கர், ஆண்டி-தெஃப்ட் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன. ஈகிள்+ ஆனது சன் மொபிலிட்டியின் IP67 நீர்ப்புகா மாற்றக்கூடிய பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஈகிள்+ 21 KW உள்ளது. 1P67 வாட்டர் ப்ரூஃப் ஸ்வாப்பபிள் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை செல்லும். அதேசமயம் TUFF+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kw, LFP, IP67 வாட்டர் ப்ரூஃப் பேட்டரி பேக் உள்ளது, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லும். TUFF+ இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர்கள், அதே சமயம் ஈகிள்+ இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர்கள் ஆகும்.