ஒழுங்கா ஜெயிலுக்கு போயிடு... சூடாமணிக்கு செளந்தரபாண்டி கொடுக்கும் வார்னிங் - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலில் நேற்று சூடாமணி, வீராவை போலீஸாக சொல்லி உத்வேகம் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Anna serial
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி வீராவை போலீஸாக சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பாட்டு பாடிய கனி பாதியில் நிறுத்தி விட, சூடாமணி ஏன் நிறுத்திட்ட என்று கேட்க, கன்னியாகுமரி குடும்ப கதையை சொல்லி விட்டு நான் பாடினா அண்ணனுக்கு பிடிக்காது என்று சொல்கிறாள். ஆனால் சூடாமணி நீ பாடு உங்க எல்லாருடைய கனவையும் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்ல, எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர்.
Zee Tamil Anna serial
அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர, சிவபாலன் குழம்பை சரியா அக்கா கிட்ட கொடுத்துடீங்களா என்று கேட்க, பாக்கியத்துக்கு சௌந்தரபாண்டி தான் பரணி வீட்டிற்கு போய் இருக்கார் என்ற விஷயம் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியாகும் அவள், அண்ணியை பார்த்து இருப்பாரோ என்று குழப்பமும் அடைகிறாள். உடனே பரணிக்கு போன் செய்து விசாரிக்க, அவள் அத்தையை பார்க்கல என்று சொல்கிறாள்.
இதையும் படியுங்கள்... டிஆர்பி-க்காக பிரபல தமிழ் ஹீரோவை களமிறக்கும் தெலுங்கு பிக்பாஸ் டீம் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
Anna serial Update
இருந்தாலும் பாக்கியத்துக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து ஷண்முகம் இவ்வளவு நாளா நான் என் தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒரு அண்ணனா மட்டும் தான் யோசிச்சி இருக்கேன், ஆனால் அம்மா அம்மா தான் என்று சொல்லி எமோஷன் ஆகிறான். மேலும் பொண்ணுங்களோட கனவை கண்டு பிடிச்சி அதை நிறைவேற்றணும்னு நிறைய பேர் ஆசைப்படுறாங்க. நானும் என் தங்கசிகளோட கனவை நிறைவேற்றப் போறேன். அது தான் எனது முதல் லட்சியம் என்று முடிவெடுக்கிறான்.
Anna serial Today Episode
பிறகு சூடாமணி எல்லை கோவிலுக்கு போயிட்டு வருவதாக சொல்லி கிளம்பி வருகிறாள். இந்த நேரத்தில் எதிரே வரும் சௌந்தரபாண்டி, 20 வருடத்திற்கு பிறகு சூடாமணியை நேருக்கு நேராக சந்திக்கிறார், ஒழுங்கு மரியாதையா திரும்பவும் ஜெயிலுக்கே போயிடு என்று மிரட்ட, சூடாமணி உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்தடுத்த ட்விஸ்ட் பற்றி அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... 42 வயதில்.. 10 வருட காத்திருப்புக்கு பின் இரட்டை குழந்தைகளுக்கு தாயான சீரியல் நடிகை ஜூலி! குவியும் வாழ்ந்து!