MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தமிழ்நாட்டில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட ஆகல... அதற்குள் ஓடிடி ரிலீஸா? பிரேமலு தந்த அதிர்ச்சி

தமிழ்நாட்டில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட ஆகல... அதற்குள் ஓடிடி ரிலீஸா? பிரேமலு தந்த அதிர்ச்சி

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமலு திரைப்படம் தமிழில் கடந்த வாரம் தான் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 17 2024, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Premalu OTT

Premalu OTT

மலையாள சினிமாவிற்கு கடந்த மாதம் ஒரு பொன்னான மாதமாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில் கடந்த மாதம் மட்டும் வரிசையாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது மலையாள சினிமா. மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் 15-ந் தேதி திரைக்கு வந்த பிரம்மயுகம் திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

24
manjummel boys, Premalu, Bramayugam

manjummel boys, Premalu, Bramayugam

இதையடுத்து வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் ரூ.200 கோடி வசூலை நெருங்கி வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... 2022-ல் 4 கோடி; 2024ல் 100 கோடி சம்பளம்! காந்தாரா படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - ரிஷப் ஷெட்டி Net Worth இதோ

34
premalu Tamil Release

premalu Tamil Release

அதேபோல் மலையாள சினிமா தந்த மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படம் தான் பிரேமலு. இப்படமும் கடந்த மாதம் தான் திரைக்கு வந்தது. இப்படம் கேரளாவில் சக்கைப்போடு போட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதனால் தமிழ்நாட்டில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 15-ந் தேதி பிரேமலு படத்தின் தமிழ் வெர்ஷன் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.

44
Premalu OTT release Date

Premalu OTT release Date

தமிழ்நாட்டிலும் பிரேமலு படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி இன்னும் 3 நாட்கள் கூட ஆகாத நிலையில், பிரேமலு படத்தை வருகிற மார்ச் 29-ந் தேதி ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இப்படம் அன்றைய தினம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் அப்படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Ajithkumar : அஜித் - ஷாலினியின் காதலுக்கு 25 வயது.... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஏகே - வைரலாகும் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved