MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 2022-ல் 4 கோடி; 2024ல் 100 கோடி சம்பளம்! காந்தாரா படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - ரிஷப் ஷெட்டி Net Worth இதோ

2022-ல் 4 கோடி; 2024ல் 100 கோடி சம்பளம்! காந்தாரா படத்தால் ஓஹோனு மாறிய வாழ்க்கை - ரிஷப் ஷெட்டி Net Worth இதோ

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பேமஸ் ஆன நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 17 2024, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rishab shetty

Rishab shetty

காந்தாரா படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் ரிஷப் ஷெட்டி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த சைனைடு என்கிற கன்னட படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 2012-ம் ஆண்டு வெளிவந்த துக்ளக் படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, 2016ம் ஆண்டு ரிக்கி என்கிற படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.

26
Kantara Director Rishab shetty

Kantara Director Rishab shetty

பின்னர் அதே ஆண்டு கிரிக் பார்ட்டி என்கிற படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த இரண்டு படங்களிலுமே ரிஷப் ஷெட்டியின் சகோதரர் ரக்‌ஷித் ஷெட்டி தான் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இன்று பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவை தனது கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியதும் ரிஷப் ஷெட்டி தான்.

36
Kantara hero Rishab shetty

Kantara hero Rishab shetty

பின்னர் குழந்தைகளை மையமாக வைத்து கடந்த 2018-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கிய ‘சா.ஹி.பிர.ஷாலே காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்’ என்கிற திரைப்படம் சிறந்த குழந்தைகள் படத்துக்கான தேசிய விருதை வென்றிருந்தது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார் ரிஷப் ஷெட்டி. அதன்பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காந்தாரா.

இதையும் படியுங்கள்... Ajithkumar : அஜித் - ஷாலினியின் காதலுக்கு 25 வயது.... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஏகே - வைரலாகும் வீடியோ

46
Rishab shetty growth

Rishab shetty growth

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தாரா திரைக்கு வந்தது. ஆரம்பத்தில் கன்னடத்தில் மட்டும் வெளிவந்த இப்படம் அங்கு அமோக வரவேற்பை பெற்று வருவதை அறிந்த பிற மொழி தயாரிப்பாளர்கள் அதன் டப்பிங் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் ரிலீஸ் செய்தனர். திரையிட்ட இடமெல்லாம் காந்தாராவுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதனால் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது.

56
Rishab Shetty salary

Rishab Shetty salary

காந்தாரா வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. இப்படி ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அவர் காந்தாரா படத்திற்காக ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி இருந்தாராம். ஆனால் அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு ரூ.50 கோடி சம்பளம் மட்டுமின்றி படத்தின் லாபத்தில் இருந்தும் குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்துள்ளார்களாம்.

66
Rishab shetty Net Worth

Rishab shetty Net Worth

இதன் காரணமாக காந்தாரா 2-ம் பாகத்துக்காக அவரின் சம்பளம் ரூ.100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. முதல் பாகத்துக்கு அவர் வாங்கிய சம்பளத்தை விட இது 25 சதவீதம் அதிகமாம். இதன் மூலம் காந்தாராவுக்கு முன்னர் வரை ரூ.12 கோடியாக இருந்த ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.100 கோடிக்கு மேல் சென்றுவிட்டதாம். இப்படி ஒரே படத்தின் மூலம் ரிஷப் ஷெட்டியின் வாழ்க்கையே டோட்டலாக சேஞ்ச் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஜெட் வேகத்தில் படங்களை அடுக்கும் தனுஷ்.. SK பட இயக்குனருடன் இணையப்போவதாக தகவல் - யாருப்பா அது?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved