- Home
- Gallery
- Vadakkupatti Ramasamy Box Office: சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் முதல் நாள் வசூல்
Vadakkupatti Ramasamy Box Office: சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் முதல் நாள் வசூல்
நடிகர் சந்தானம் நடிப்பில் நேற்று வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, விஜய் அஜித், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சந்தானம், 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படம் சந்தானத்துக்கு வெற்றியை த் தேடிக் கொடுத்த நிலையில், இதைத்தொடர்ந்து நடித்த 'தில்லுக்கு துட்டு' முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக கல்லா காட்டியது.
எனவே... ஒரு கட்டத்தில் இன்றி நடித்தார் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்தார் சந்தானம். அந்த வகையில் சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவர் ஹீரோ அவதாரம் எடுத்த சில படங்கள் வெற்றி பெற்றாலும் பல படங்கள் தோல்வியை தழுவியது.
Sunny Leone New Business: 1000 ரூபாய்க்கு அசத்தல் ஆஃபர்.! புதிய தொழிலில் இறங்கிய சன்னி லியோன்.!
கடந்தாண்டு இவருடைய நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான கிக் மற்றும் 80'ஸ் பில்டப் திரைப்படங்கள் தோல்வியை தழுவியது.
தற்போது முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்டை மையமாக வைத்து சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் நேற்று வெளியானது. ஏற்கனவே சந்தானத்தை வைத்து டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றும், நாளையும், விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.