விக்னேஷ் சிவன், கூல் சுரேஷ் உடன் கூட்டணி... சைலண்டாக உருவாகும் சந்தானத்தின் பிரம்மாண்ட படம்
அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
santhanam
தமிழ் சினிமாவில் முன்னணி பைனான்சியராக வலம் வருபவர் அன்புச்செழியன். இவரது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை' போன்ற படங்களை தயாரித்துள்ளது. அடுத்ததாக அவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளார். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.
Santhanam next movie
மேலும், இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Santhanam new film
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். டி.இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
Anbucheliyan, santhanam
ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா மற்றும் பாபா பாஸ்கர். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்... சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே... ஸ்லீவ் லெஸ் சுடியில் கார்ஜியஸ் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - கியூட் Photos