Palani Murugan Temple: நாளை பழனி முருகன் கோயிலுக்கு போறீங்களா? கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்!
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
palani murugan temple
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
Rope Car
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: Today Gold Rate In Chennai: மூன்றாவது நாளாக எகிறும் தங்கம் விலை! 55,000ஐ நெருங்கும் சவரன்! அலறும் பொதுமக்கள்!
Rope car service cancelled