இது இருக்கிறதுனால தான ஓவரா ஆடுற.. காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்து காதலி.. நடந்தது என்ன?
இரண்டு ஆண்டுகளாக பழகி விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Love Couple
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 26 வயது பெண் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் விகாஷ் சிங்(30) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண் மருத்துவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
Refuses to Marry
இதன் காரணமாக இரண்டு முறை கர்ப்பம் அடைந்த அந்த பெண் கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் கூறும் போதெல்லாம் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். பின்னர் இளைஞருக்கு இறுதி வாய்ப்பாக பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் காலக்கெடு விதித்துள்ளார். இதற்காக சார்பதிவாளர் அலுவலகம் வர வேண்டுமென தன் காதலனை மருத்துவர் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், அவர் வரவில்லை.
Boyfriend Private Parts Cut
இந்நிலையில் காதலன் ஏமாற்றுவதை உணர்ந்த இளம்பெண் நைசாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். இதனையடுத்து அவரை மீட்டு பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Wwomen Arrest
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்ய மறுத்ததால் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.