MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரவீனா பதில் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 08 2024, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Raveena

Raveena

விஜய்யின் ஜில்லா, புலி, விஷ்ணு விஷாலின் ராட்சசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இதையடுத்து சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த ரவீனா, மெளன ராகம் தொடரின் 2-வது சீசனில் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய ரவீனா, கடந்த சீசனில் ஷிவாங்கி விட்டுச் சென்ற இடத்தை நிரப்பினார். இவர் சொல்லும் கடி ஜோக்குகளுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

24
Bigg Boss Raveena

Bigg Boss Raveena

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன ரவீனா, அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணி உடன் காதல் புறாவாக வலம் வந்த ரவீனாவுக்கு அதுவே மைனஸ் ஆகவும் அமைந்தது. மணிக்காக விளையாடிய இவரது கேம் ரசிகர்களுக்கு பிடிக்காததால் இறுதிப்போட்டுக்கு முன்னரே ரவீனாவை எலிமினேட் செய்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... CWC Manimegalai: பண கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை..! கண்டு கொள்ளாத விஜய் டிவி?

34
raveena daha

raveena daha

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய நடனத்திறமையை நிரூபிப்பதற்காக ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார் ரவீனா. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் முனைப்போடு வெறித்தனமாக ஆடி வருகிறார் ரவீனா. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை வைத்திருக்கும் ரவீனா, அவர்களுடன் நேரலையில் கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

44
raveena daha about Cook With Comali 5

raveena daha about Cook With Comali 5

அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்பீர்களா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரவீனா, தற்போதைக்கு அது தெரியவில்லை, அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து தற்போதுவரை தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், அதில் பங்கேற்பது கஷ்டம் தான் என கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். குக் வித் கோமாளியில் ஸ்டார் கோமாளியாக இருந்த ஷிவாங்கி கடந்த சீசனில் குக் ஆக மாறியதால் இந்த சீசனில் அவரால் பங்கேற்க முடியாது. அவரது ஜெராக்ஸ் காப்பியாக வந்த ரவீனாவும் தற்போது குக் வித் கோமாளியில் கலந்துகொள்ள முடியாது என கூறி உள்ளதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நானும் யோகிபாபுவும் டுவின்ஸ் மாதிரி... சைரன் பட விழாவில் ஜெயம் ரவி கலகல பேச்சு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரவீணா தாஹா
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved