என் நிர்வாணத்தை கலைக் கண்ணோட்டத்தோட பாருங்க... கெஞ்சும் நடிகை..!

First Published Feb 8, 2020, 2:54 PM IST

விஜய தேவரகொண்டா நடிக்கும் புதியபடம் 'வேர்ல்டு பேமஸ் லவ்வர்', இதில் கதாநாயகியாக நடிக்கிறார் ராசி கண்ணா. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் ராசி கண்ணா நிர்வாணமாக குளிப்பதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல் மற்றொரு காட்சியில் விஜய தேவரகொண்டாவுக்கு உதட்டு முத்தம் தரும் காட்சி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் ராசி கண்ணாவுக்கு ரசிகர்களிடமிருந்து செம் டோஸ் விழுந்த வண்ணமிருக்கிறது. நிர்வாணமாக நடிப்பதெல்லாம் தேவையா? என்று அவரிடம் கேள்வி கேட்டு குடைந்திருக்கின்றனர். அதற்கு பதில் அளித்திருக்கிறார்.


'கலைக் கண்ணோட்டத்துடன் இக்காட்சிகளை பார்க்க வேண்டும். அந்த கண்ணோட்டத்துடன்தான் இக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படி நடித்து யார் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. கதைப்படி இது காட்சிக்கு தேவைப்பட்டதால் எடுக்கப்பட்டது. எந்தவொரு முடிவையும் படத்தைப் பார்க்காமல் யாரும் எடுக்கக்கூடாது' என்றார் ராசி கண்ணா.