அடேங்கப்பா கேமியோ ரோலில் நடிக்கவே இத்தனை கோடியா? லால் சலாம் படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பள விவரம் இதோ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
Rajinikanth daughter aishwarya
3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 8 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Lal salaam movie team
லால் சலாம் படத்தில் ஹைலைட்டான விஷயமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கேமியோ தான். இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lal salaam moideen bhai
இந்த நிலையில், லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அவருக்கு ரூ.40 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கேமியோ ரோலுக்கே 40 கோடியா என வாயடைத்துப் போய் உள்ளனர். ரஜினி நடித்துள்ளதால் இப்படத்தின் பிசினஸும் வேறலெவலில் நடந்து வருகிறது.
Rajinikanth Lal Salaam salary
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினி நடிப்பில் வெளியாகும் படமாக லால் சலாம் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இப்படத்தில அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... Iraivan movie review : ஜெயம் ரவி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? இறைவன் படத்தின் விமர்சனம் இதோ