Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் கத்திரி வெயில்.. மழை எப்போது வரும்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்..

கத்திரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோடை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Mid May things will change to widespread heavy rains says tamilnadu weatherman
Author
First Published May 9, 2024, 1:35 PM IST

கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஏப்ரல் முதல் ஜுன் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அதற்கேற்ப நாட்டின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் பரமத்தி, நாமக்கல், மதுரை, வேலூர், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது.

ஆன்லைன் செயலி மூலம் கடன்! பணத்தை கட்டிய பிறகும் புகைப்படத்தை நிர்வாணமாக்கி மிரட்டல்! சென்னை இளைஞர் தற்கொலை!

இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது. மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்பதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மே மாதத்தில், கத்திரி வெயிலின் உச்சத்தில் கடல் பக்கத்தில் இருந்து மேகங்கள் நகர்ந்து வருகிறது. தாம்பரம் பகுதிகளில் பெருங்களத்தூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. கொள்ளிடம், நன்னிலம், திருவாரூர், கல்பாக்கம், ராமநாதபுரம் என கடலோர பகுதிகள் அனைத்திலும் மழை பெய்து வருகிறது. மே மாதத்தின் நடுப்பகுதியில் பரவலான கனமழை பெய்யக்கூடும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

இதே போல் அவரின் மற்றொரு பதிவில் “ அடுத்த வாரத்தில் சென்னையில் மழை பெய்யக்கூடும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை குறைந்து பரவலாக மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

Small Onion : திடீரென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.! ஈரோடு சந்தையில் ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?

இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios