Chennai Rain: காலை 10 மணிக்குள் இந்த 5 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் காலை 10 மணிக்குள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
Chennai Rain
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 டூ 2 மணி வரை மின்சாரம் இருக்காது.!
Chennai Rain Alert
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.