MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்! உணர்வு பொங்க இரங்கல் தெரிவித்த ராதிகா!

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்! உணர்வு பொங்க இரங்கல் தெரிவித்த ராதிகா!

நடிகை ராதிகா, மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு... உணர்வு பூர்வமாக தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Dec 28 2023, 10:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

26

இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக, நாளை காலை 6 மணிமுதல்... மதியம் 1 மணி வரை, தீவுத்திடலில் வியாகாந்தின் உடல் பொது அஞ்சலிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபலங்கள் பலர் விஜய்காந்துடனான நினைவுகளை பகிர்ந்து, தங்களின் இதய பூர்வமான அஞ்சலியை விஜயகாந்துக்கு தெரிவித்து வருகிறார்கள்.
 

36
vijayakanth

vijayakanth

அந்த வகையில் பிரபல நடிகை ராகிகா... உணர்வு பூர்வமாக தன்னுடைய இரங்கலை எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ராதிகா, பல படங்களில் விஜயகாந்துடன் நடித்துள்ளது மட்டும் இன்றி விஜயகாந்துடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கியவர். 
 

46
Vijayakanth Movie

Vijayakanth Movie

ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருந்ததோடு மட்டும் இன்றி, ராதிகாவுடன் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் அந்த திருமணத்தை நிறுத்தி, விஜயகாந்தை அழைத்து வந்து பிரேமலதாவுக்கு திருமணம் செய்து வைத்தவர் விஜயகாந்தின் உயிர் நண்பர் ராவுத்தர் தான். 

56

இப்படி விஜயகாந்துடன் பல நெருக்கமான சர்ச்சைகளில் சிக்கிய ராதிகா சரத்குமார் தன்னுடைய இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது, "திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த். வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!! தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!! சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..! அவருடைய நண்பர்களும் ரசிகர்களும்  மிகவும்  துடித்து போனார்கள்..!!
 

66
Radhika

Radhika

விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!! அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!! இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது  விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்...!! ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறேன்...!அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...!! என தெரிவித்துள்ளார். 
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா சரத்குமார்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved