திருமண விழா.. மனமக்களோடு Cute Pose - சூப்பர் சேலையில் சொக்கவைக்கும் நடிகை பிரியா பவானி சங்கர்!
Priya Bhavani Shankar : தமிழகத்தில் பிறந்து தனது பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு செய்தி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக களம் இறங்கி, அதன் பிறகு சின்னத்திரையில் நாடகங்களில் நடிக்க துவங்கியவர் தான் பிரியா பவானி சங்கர்.
Vani Bhojan
இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "மேயாத மான்" என்கின்ற திரைப்படம் தான் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்தது.
Vani Bhojan Friend
அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில் 2020 ஆம் ஆண்டு வெளியான மாஃபியா திரைப்படம், ஒரு ஆக்சன் நாயகியாக பிரியா பவானி சங்கரை தரம் உயர்த்தியது என்றே கூறலாம்.
Priya Bhavani
அன்று தொடங்கி இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தற்பொழுது தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார். இறுதியாக இந்த 2023 ஆம் ஆண்டு வெளியான எஸ். ஜே. சூர்யாவின் பொம்மை என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Priya Bhavani Shankar
தனது நண்பர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்ற, அவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது டிமான்டி காலனி, இந்தியன், ஸிப்ரா என்று சுமார் ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.