"பாலிவுட் உலகம் இப்படி தான் இருக்கும்".. ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை - பளிச்சென்று பேசிய டாப் ஹீரோயின்ஸ்!
South Indian Actresses About Bollywood : பாலிவுட் திரை உலகில் முன்னணி நாயகிகளாக விளங்கிய மற்றும் விளங்கி கொண்டிருக்கின்ற பல நடிகைகள் தமிழ் மொழியில் இருந்து தான் தங்கள் திரையுலக பயணத்தை தொடங்கினார்கள் என்றால் அது மிகையல்ல.
Actress Asin
இந்த சூழலில் தமிழ் மொழியிலிருந்து ஹிந்திக்கு சென்று அங்கு ஆதிக்கம் செலுத்த துவங்கிய முன்னணி நடிகைகள் பாலிவுட் உலகம் குறித்த தங்களுடைய கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளனர். அது குறித்து விளக்கமாக இந்த பதிவில் காணலாம்.
அசின்.. நடிகர் அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் அவர். அவரது நடிப்பு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது மற்றும் அந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன் பிறகு பாலிவுட் உலகின் முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கிய அசின், தனது கோலிவுட் மற்றும் பாலிவுட் என்று எந்த பாரபட்சமும் கிடையாது என்று கூறினார். ஆனால் 2016ம் ஆண்டு வரை ஹிந்தி படங்களில் நடித்து வந்தாலும், 2011ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் மொழியில் நடிக்கவில்லை.
பிளாக் கலர் நெட்டட் ட்ரெஸில் திணறடிக்கும் வரலட்சுமி சரத்குமார்.. லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..
Actress Genelia
"துஜே மேரி கசம்" என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி என்று பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், தென்னிந்திய ரசிகர்கள் தாங்கள் விரும்பும் நட்சத்திரங்களை பெரிதும் விருப்புகின்றனர். அதை போலத்தான் இங்கும். எனக்கும் தென்னிந்தியா மற்றும் வட இந்தியா என்று வேறுபாடு கிடையாது என்றார்.
Shruti Haasan
தமிழ் மொழியில் அறிமுகமாகி இன்று ஹிந்தி மொழியில் அசத்தி வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் ஒரு முறை பேட்டியில் பேசும்போது "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பலமுறை இங்கு நான் ஒரு அந்நியரை போல உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக பாலிவுட்டில், வடக்கு-தெற்கு என்ற ஒரு விஷயம் தொடர்ந்து நடக்கிறது" என்றார்.
Sridevi
ஸ்ரீதேவி.. முதல் பெண் சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமாவை ஆட்சி செய்தார் அவர் மற்றும் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் முன்னணி நடிகராக பணியாற்றினார் அவர். ஒரு படத்திற்கு சுமார் 1 கோடி வசூலித்த முதல் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி தான். பாலிவுட் உலகின் மூலம் தான், பெரிய அளவில் தான் புகழ்பெற்றதாக அவர் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.