MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லியோ முதல் ஜவான் வரை... பொங்கல் ஸ்பெஷலாக போட்டிபோட்டு புதுப்படங்களை இறக்கும் டிவி சேனல்கள் - முழு லிஸ்ட் இதோ

லியோ முதல் ஜவான் வரை... பொங்கல் ஸ்பெஷலாக போட்டிபோட்டு புதுப்படங்களை இறக்கும் டிவி சேனல்கள் - முழு லிஸ்ட் இதோ

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி டிவியில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jan 09 2024, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pongal Special Movies on TV

Pongal Special Movies on TV

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. சுமார் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் அயலான், கேப்டன் மில்லர், மிஷன் ஆகிய படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தொலைக்காட்சியிலும் பொங்கலுக்கு போட்டி போட்டு புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. அதன் விவரத்தை பார்க்கலாம்.

25

விஜய் டிவி

விஜய் டிவியில் வருகிற ஜனவரி 14-ந் தேதி போகிப் பண்டிகையன்று பிற்பகல் 3 மணிக்கு சரத்குமார் நடித்த பரம்பொருள் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதையடுத்து ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று காலை 11.30 மணிக்கு யோகிபாபுவின் லக்கி மேன், மாலை 5.30 மணிக்கு உதயநிதியின் மாமன்னன், இரவு 9 மணிக்கு போர் தொழில் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. ஜனவரி 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு பிச்சைக்காரன் 2 மற்றும் இரவு 9 மணிக்கு குட் நைட் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

35

சன் டிவி

சன் டிவியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படத்தை வருகிற ஜனவரி 15-ந் தேதி பொங்கல் பண்டிகையன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஜனவரி 16-ந் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் - கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் திட்டவட்டம்

45

கலைஞர் டிவி

கலைஞர் டிவியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வருகிற ஜனவரி 15-ந் தேதி அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இறைவன் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

55

ஜீ தமிழ்

ஜீ தமிழியில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வருகிற ஜனவரி 14-ந் தேதி ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் ஜனவரி 15-ந் தேதி விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான மார்க் ஆண்டனியும், ஜனவரி 16-ந் தேதி ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த வீரன் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்... குமுதா ஹாப்பி அண்ணாச்சி... டெஸ்ட் என்னோட பெஸ்ட் படம் என நெகிழ்ந்த நயன்தாரா - காரணம் என்ன?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved