Boat First Review: யோகி பாபுவின் 'BOAT' திரைப்படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கூறிய பிரபலம்!
நடிகர் யோகி பாபு நடிப்பில், ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள 'BOAT' படத்தை பார்த்து விட்டு, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர் போன்ற படங்களை அசாதாரணமாக இயக்கி... தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு வைகை புயல் வடிவேலுவை வைத்து, 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இதை தொடர்ந்து அறை எண் 305-ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி, போன்ற படங்களை இயக்கினார். அதே போல் அந்தாலஜி படமான கசட தபர, விக்டிம், போன்ற படங்களை இயக்கிய இயக்கிய இவர் தற்போது யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாக உள்ள 'BOAT' படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த் உள்ளிட் பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த, பிரபல மூத்த முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சிம்பு தேவன் இயக்கிய, போட் படத்தை பார்க்க நேர்ந்தது. மிகவும் அருமையான தருணம் இது... கண்டிப்பாக இப்படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய மையில் கல்லாக இப்படம் இருக்கும் என கூறியுள்ளார்.