MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நயன்தாராவும் இல்ல... திரிஷாவும் இல்ல; ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ‘அந்த’ நடிகை யார் தெரியுமா?

நயன்தாராவும் இல்ல... திரிஷாவும் இல்ல; ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ‘அந்த’ நடிகை யார் தெரியுமா?

நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை மிஞ்சும் வகையில், ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2024, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்று பல வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலகட்டத்தில் நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். தற்போது திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு நடிகை வெறும் 3 நிமிட பாடல் காட்சியில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

24

அந்த நடிகையின் பெயர் ஊர்வசி ரவ்துலா. இவர் பாலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருகிறார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய இவர், பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஊர்வசி.

இதையும் படியுங்கள்... Vishal : திருமணம் செய்யச்சொல்லி பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்... ஆனா என்னோட முடிவு இதுதான் - விஷால் ஓபன் டாக்

34

தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்க படக்குழு முதலில் அணுகியது நடிகை நயன்தாராவை தான். ஆனால் அவரோ எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதால், அவருக்கு இணையான சம்பளத்தை கொடுத்து ஊர்வசி ரவ்துலாவை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. லெஜண்ட் படத்திற்கு பின்னர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 109-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி.

44

இந்த நிலையில், அவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் ஊர்வசி. அந்த வெறும் 3 நிமிட பாடலுக்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். நயன்தாரா, திரிஷா கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்காத நிலையில், ஊர்வசி ரவ்துலா இந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்கி உள்ளது தென்னிந்திய திரையுலகில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நடிகை ஊர்வசி ரவ்துலாவின் சொத்து மதிப்பு ரூ.550 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Reshma : தவறான சர்ஜரியால் உதடு பெரிதாகி முகம் மாறிவிட்டதா? சர்ச்சை கமெண்ட்டுகள் குறித்து மனம்திறந்த ரேஷ்மா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved