- Home
- Gallery
- ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி! சந்தோஷத்தில் மனோகரி... சுடர் மீது கோபத்தில் இந்து! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !
ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி! சந்தோஷத்தில் மனோகரி... சுடர் மீது கோபத்தில் இந்து! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்துவின் குடும்பத்தை கண்டு பிடித்து விட்டதாக சொல்ல, மனோகரி வீட்டிற்கு வர சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வார்டன் வந்து கொண்டிருக்கும் வழியில் மனோகரி ஏற்பாடு செய்த ஆள் ஆக்சிடென்ட் செய்து அவரது போனை எடுத்து போட்டோவை மனோகரிக்கு அனுப்பி வைக்கின்றனர். போட்டோவை பார்த்த மனோகரி பேரதிர்ச்சி அடைகிறாள்.
இதையடுத்து உடனடியாக சுடரை இந்த வீட்டை விட்டு துரத்தியாகணும் என்று முடிவெடுத்து ஒரு ஏஜென்சிக்கு போன் செய்து சுடர் பேருக்கு உடனடியாக விசா ரெடி பண்ண சொல்கிறாள். அடுத்து இந்து தீபாவிடம் சுடர் எதுக்கு எழிலை தொட்டு தொட்டு பேசணும்? இதெல்லாம் சரியே இல்ல என்று சொல்லி கோபப்பட்டு பேசி கொண்டிருக்கிறாள்.
விமல் நடிக்கும் 'மா.பொ.சி' படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்! தனுஷ் பட தலைப்பை சூட்டிய இயக்குனர்!
இந்த நேரத்தில் சுடர் அங்கு வந்து அவர் இந்து இந்துனு தான் சொல்லிட்டே இருக்காரு, பாவம் என்று சொல்ல இந்து இதை கேட்டதும் அவசப்பட்டு தப்ப பேசிட்டோமே என்று பீல் பண்ணுகிறாள். பிறகு கனகவல்லி ஜோதிடரை வீட்டிற்கு வர வைக்கிறாள்.
வீட்டிற்கு வந்த ஜோசியர் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து முடித்ததும் கனகவல்லி எழிலோட ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்ல எழில் எதுக்கு இதெல்லாம் கோபப்படுகிறாள். பிறகு ஜோசியர் ஜாதகத்தை பார்த்து எழிலுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் ஷாக்காக மனோகரி சந்தோசப்படுகிறாள்.
Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.