NASA : பூமிக்கு பெரும் அச்சுறுத்தல்.. பூமியை நோக்கி வரும் கோள்.. நாசா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பான நிகழ்ச்சியை நாசா ஏற்பாடு செய்தது. இதன்போதே இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இன்னும் 14 ஆண்டுகள் உள்ளதால், அதைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
NASA
விண்வெளியில் இலக்கின்றி சுற்றும் சிறுகோளால் பூமி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு சிறுகோள் பூமியை நோக்கிச் செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜூலை 12, 2038 அன்று பூமியைத் தாக்கும் ஒரு சிறுகோள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதன் அளவு இன்னும் தெரியவில்லை.
NASA Warns
ஆனால் பூமியைத் தாக்கும் அச்சுறுத்தல் 72 சதவீதம் ஆகும். தற்போது, இந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க நாசாவிடம் எந்த வழியும் இல்லை, என்றார். விண்வெளியில் உள்ள சிறுகோள்களால் நமது பூமிக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கும் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்கும் விஞ்ஞானிகள் இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
Planet-sized asteroid
இந்த பணியின் மூலம் பூமிக்கு ஏற்படும் அச்சுறுத்தல் முதலில் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு (2023) ஏப்ரலில், நாசா விஞ்ஞானிகள் இருபதாண்டுகளுக்கு ஒருமுறை பிளானட்டரி டிஃபென்ஸ் இன்டராஜென்சி டேபிள் டாப் பயிற்சியை மேற்கொண்டனர். தற்போது இந்த சிறுகோள்களால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
Asteroid
ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுகோள்களை எதிர்கொள்ள தயாராகும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பான நிகழ்ச்சியை நாசா ஏற்பாடு செய்தது.
Earth
இதன்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இன்னும் 14 ஆண்டுகள் உள்ளதால், அதைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாசாவுடன் சேர்ந்து அமெரிக்க அரசும் பூமியை நோக்கி செல்லும் துண்டுகளை ஆய்வு செய்வதற்காக உடனடியாக ஏவுவதற்கு ஏற்ற விண்கலத்தை தயார் செய்யும் மதிப்பீட்டிற்கு வந்தது.
Scientists
தேவைப்பட்டால் இந்த விண்கலம் சிறுகோளை நெருங்கி அதன் மீது தரையிறங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை திசைதிருப்ப கைனெடிக் இம்பாக்ட் என்ற தொழில்நுட்பத்தை நாசா ஏற்கனவே உருவாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்கலம் ஒன்று சிறுகோளுடன் மோதி அதன் திசை மாற்றப்படும்.
Collision
இருப்பினும், இந்த தொழில்நுட்பத்துடன் கூடுதல் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த திட்டம் நாசா விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ளது. இவர்களின் மதிப்பீட்டின்படி, பூமி முழுவதும் சேதம் விளைவிக்கக்கூடிய சிறுகோள்கள் இல்லை என்றாலும், சிறியவற்றால் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?