சமந்தாவால்... மாமியார் வீட்டில் சோபிதாவுக்கு வந்த பிரச்சனை! நாகார்ஜுனா போட்ட கண்டிஷன்!
நாக சைதன்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி இருக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு, திருமணத்திற்கு முன்பே மாமனார் நாகார்ஜுனா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Nagarjuna Condition to Sobhita
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் அக்கினேனி குடும்பத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இது போல் ஒரு பிரச்சனை ஏற்படாத வண்ணம், சைதன்யாவை கல்யாணம் செய்யும் முன்பே, சோபிதாவுக்கு மாமனார் நாகார்ஜுனா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
Nagarjuna Akkineni
நாகார்ஜுனாவுக்கும் அவரின் முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர் தான் நாக சைதன்யா. தன்னுடைய அம்மாவிடம் சிறுவயது முதல் வளர்ந்த இவர், பின்னர் தன்னுடைய அப்பாவிடம் வளர்ந்தார். நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியான அமலா, தன்னுடைய மகன் போலவே எந்த ஒரு பாகுபாடும் இன்றி நாக சைதன்யாவை வளர்த்தார். தன்னுடைய தந்தையை போலவே ஒரு நடிகராக ஆசைப்பட்ட நாக சைதன்யா, தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமான நிலையில், சில வருடங்களிலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த இளம் ஹீரோவாக மாறினார்.
மயோசிட்டிசால் திரையுலகில் இருந்து விலக நினைத்த சமந்தா.! மீட்டெடுத்த 5 விஷயங்கள்..!
Samantha - Chaitanya 5 years love
முன்னணி நடிகர் என்கிற இடத்தை எட்டிய பின்னர் நடிகை சமந்தாவை காதலிக்க துவங்கினார். சமந்தா - நாக சைத்தாயா இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் காதலித்து.. 2017-ல் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களின் திருமணம், கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் டோலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் காத்து கொண்டனர்.
Naga Chaitanya and Sobhita wedding soon
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமந்தா - சைதன்யா திருமண வாழ்க்கை மூன்றே வருடத்தில் முடிவுக்கு வந்தது. சமந்தாவை பிரிந்த பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவின் காதல் வலையில் வீழ்ந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'டிமான்டி காலனி 2'..! திகில் மூட்டியதா? திரைப்பட விமர்சனம்!
Nagarjuna
ஏற்கனவே சைதன்யா வாழ்க்கையில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்க கூடாது என்பதில், நாகார்ஜுனா கவனமாக இருப்பதாகவும், அதனால்தான் திருமணத்திற்கு முன்.. ஷோபிதாவுக்கு சில விஷயங்களை நாகர்ஜுனா தெளிவு படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் சில விஷயங்களிலும் அவர் தெளிவு பெற்றதாக கூறப்படுகிறது. அவரின் நிபந்தனைகளுக்கு சோபிதா ஒப்புக்கொண்ட பின்னர் தான் இந்த திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
Samantha Bold Photos
சமந்தாவை, சைதன்யா திருமணம் செய்த பிறகு, அக்கினேனி குடும்பத்தினர் அவருக்கு எந்த நிபந்தனையும் போடவில்லை. அவர் இஷ்டப்பட்ட படங்களில் நடிக்கவும் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தவும, முழு சுதந்திரம் கொடுத்தனர். அதனால் தான் திருமணத்திற்கு பிறகு முன்பை விட ஹாட்டான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார் சமந்தா.
Bold and Choosy Roles
தென்னிந்திய திரையுலகில் ஏற்பட்ட முன்னேற்றம் இவரை பாலிவுட் வரை கொண்டு சென்றது. அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் ஃபேமிலி மேன் வெப் சீரீஸ். சமந்தா இப்படி துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்தது அக்கினேனி குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் வெடித்த பிரச்சனையே அப்படியே பெரிதாகி விவாகரத்து வரை சென்றதாக சிலர் கூறினர். சமந்தா - சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான தகவலில் இதுவும் ஒன்றாக பார்க்கப்பட்டது.
Sobhita Accept condition
சமந்தாவையே மிஞ்சும் விதத்தில் போட்டோ ஷூட்டிலும், நடிப்பிலும் மிரள வைக்கும் சோபிதாவுக்கு... திருமணத்திற்கு பின்னர் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்துள்ள மாமனார் நாகார்ஜுனார் ஒரே ஒரு நிபந்தனையை கூறியுள்ளார். எந்த ஒரு திரைப்படத்தில், நடிப்பதற்கு முன்னர் கணவன் - மனைவி இருவரும் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்பது தான். அதில் இருவருக்குமே உடன்பாடு இருந்தால் நடிக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு ஏதேனும் நெருடல் இருந்தால்... எந்த ஒரு பிரச்னையும் இன்றி அடுத்த பணியில் கவனம் செலுத்துமாறு கூற இதற்க்கு சோபிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. எனினும் சோபிதா திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகுவாரா? தொடர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.