ஈஷா யோகா மையத்திற்கு சென்ற முக்தார் அப்பாஸ் நக்வி… தனது அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவு!!
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்த முன்னாள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்த முன்னாள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தனது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக அங்கிருக்கும் சூர்ய குண்டம் குளத்தில் உள்ள லிங்கங்களை வழிபட்ட அவர், அந்த குளத்தின் நீரில் தனது கால்களை நனைத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றார். அங்கு பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
தனது அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் புறநகரில் உள்ள வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவால் நிறுவப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஈஷா அறக்கட்டளைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்று பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். பிரமாண்டமான ஆதியோகி சிலை, தியானலிங்கம், சூர்யகுண்ட் ஆகியவை ஈஷா அறக்கட்டளையின் ஈர்க்கக்கூடிய முக்கிய அம்சங்களாக உள்ளது என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் அனைவருடன் முன்னாள் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் அமர்ந்து தியானம் செய்தார். பிரமாண்டமான ஆதியோகி சிலை, தியானலிங்கம், சூர்ய குண்டம் ஆகியவை ஈஷா அறக்கட்டளையின் ஈர்க்கக்கூடிய முக்கிய அம்சங்களாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்த அவர் அதுக்குறித்தும் விளக்கியிருந்தார்.
பிரமாண்டமான ஆதியோகி சிலை, தியானலிங்கம், சூர்ய குண்டம் ஆகியவை ஈஷா யோகாவின் நான்கு முக்கிய மற்றும் பயனுள்ள பாதைகளை வழங்குகிறது. அதாவது ஞானம் (அறிவு), கர்மா (செயல்), கிரியா (ஆற்றல்) மற்றும் பக்தி என்று குறிப்பிட்டுள்ளார்.