- Home
- Gallery
- Metti Oli 2: வந்துடுச்சு 'மெட்டி ஒலி' 2 அப்டேட்! இயக்குனர் திருமுருகன் முடிவால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Metti Oli 2: வந்துடுச்சு 'மெட்டி ஒலி' 2 அப்டேட்! இயக்குனர் திருமுருகன் முடிவால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பல இல்லத்தரசிகளின் மனங்களை கொள்ளை கொண்ட, மெட்டி ஒலி சீரியலில் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Thirumurugan
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, காலங்கள் மாற மாற சீரியலின் கதை களமும் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில சீரியல்கள்... எல்லா காலங்களிலும் ரசிகர்கள் மனதில் நின்று பேசும். அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் மெட்டி ஒலி. முழுக்க முழுக்க... குடும்ப கதையை மையமாக வைத்தும் 5 அக்கா தங்கைகளின் பாசத்தை மையப்படுத்தியும் இந்த தொடர் எடுக்கப்பட்டிருந்தது.
Metti oli
சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடரை, இயக்குனரும் - நடிகருமான திருமுருகன் இயக்கி இருந்தார். கடந்த 2002ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சுமார் 3 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலாகவும் இருந்தது.
சரியான நேரத்தில்.. தளபதியின் தரமான வீடியோவை வெளியிட்டு மாஸ் சம்பவம் செய்த பிக்பாஸ் சரவணன் விக்ரம்!
<p>metti oli</p>
மெட்டி ஒலி சீரியலில் காவேரி, வனஜா, காயத்ரி, உமா, ரேவதி பிரியா ஆகியோர் ஐந்து சகோதரிகளாக நடித்தது இருந்தனர். இதில் காவேரி தனம் என்கிற கதாபாத்திரத்திலும், காயத்ரி சரோவாகவும், வனஜா லீலாவாகவும், உமா விஜியாகவும், ரேவதி பிரியா பவானியாகவும் நடித்திருந்தார். இவர்களில் உமா மற்றும் வனஜா இருவரும் உண்மையிலேயே சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து, இயக்குனர் திருமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு இயக்குனர் திருமுருகன் கண்டிப்பாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வரும் என தெரிவித்தார்.
Aarthikumar Passed Away: திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திடீர் மரணம்..!
தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து வெளியாகியுள்ள தகவலில்... இன்னும் இரண்டு மாதத்தில், இந்த சீரியலின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்த சீரியலை எடுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் திருமுருகன்.
இது ஒரு புறம் இருக்க... இந்த முறை சீரியலை திரு புரொடக்சன் மூலம் தயாரிக்கும் திருமுருகன் சீரியலை இயக்க போவது இல்லை என்றும் அவருக்கு பதில், விக்ரமாதித்தன் என்பவர் தான் இயக்க உள்ளதாக மற்றொரு தகவல் வலம் வருவது.. சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.