நல்லது செஞ்சது குத்தமா? மீட்பு பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு மாரி செல்வராஜ் கொடுத்த நெத்தியடி ரிப்ளை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்ட மாரி செல்வராஜை சிலர் விமர்சித்து வந்த நிலையில், அதற்கு அவர் சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
mari selvaraj
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததே இந்த பெரு வெள்ளத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
mari selvaraj with udhayanidhi stalin
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்த மீட்பு நடவடிக்கைகளில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜும் களமிறங்கினார். அவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அழைத்துக் கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். இதையடுத்து படகுகள் உதவியுடன் கிராம பகுதிகளில் சிக்கி இருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்டதாக மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
mari selvaraj visit flood affected areas
பொதுவாக இத்தகைய மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். ஆனால் மாரி செல்வராஜை பெரும்பாலானோர் விமர்சித்த வண்ணம் இருந்தனர். அதுமட்டுமின்றி மாரி செல்வராஜ் உதயநிதி உடன் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்து இருந்தார். இதனால் மாரி செல்வராஜ் திமுகவில் பதவியை புடிக்கவே இப்படி செய்துவருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
mari selvaraj X post
மறுபுறம் மாரி செல்வராஜுக்கு ஆதரவுக்குரல்களும் எழுகின்றன. அந்த வகையில் விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜே தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் போட்டுள்ள சூசக பதிவில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என குறிப்பிட்டு தன் சொந்த ஊர் அருகே வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த நெத்தியடி ரிப்ளை வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இது டைட்டிலை விட பெருசு... பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக விசித்ராவுக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் விருது..!