இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை அடிச்சாரு... வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நடிகை பரபரப்பு புகார்
வணங்கான் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
director bala
சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர், அடுத்ததாக நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத டைரக்டராக உருவெடுத்தார். கடைசியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான படம் வர்மா. அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவான இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
Vanangaan director bala
இதையடுத்து சுமார் 4 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் பாலா, கடந்த 2022-ம் ஆண்டு வணங்கான் என்கிற படத்தை இயக்க கமிட் ஆனார். இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க 2 டி நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இதன் ஷூட்டிங் ஒரு மாதம் மட்டுமே நடைபெற்ற நிலையில், அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சூர்யா. இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார் பாலா.
இதையும் படியுங்கள்... ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படத்தை வாங்கிய அம்பானி... ஒரு வழியாக ஓடிடியில் ரிலீசானது ஆன்டி இண்டியன்
Bala, Suriya
வணங்கான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சியும் இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் அருண் விஜய் ஜோடியாக ரோஷினி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். சமீபத்தில் வெளியான வணங்கான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
Mamitha Baiju
இந்த நிலையில், வணங்கான் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சூர்யா இப்படத்தில் நடிக்கும் போது அவருடன் இணைந்து மலையாள நடிகையான மமிதா பைஜுவும் வணங்கான் படத்தில் நடித்து வந்தார். அப்போது ஒரு சீனிற்கு மூன்று டேக் வாங்கியதால் கடுப்பான பாலா, கோபத்தில் அவரை அடித்துவிட்டாராம். இதனை மமிதா பைஜு சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். சூர்யா வெளியேறிய போது மமிதாவும் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் லிங்குசாமியை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! கண்ணீர் விட்டு கதறும் குடும்பத்தினர்!