கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்.!
கலைஞர் மகளிர் உரிமை தொகை இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாகவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
Magalir Urimai Thogai
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் 14ம் தேதியே குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
‘
இந்நிலையில், இம்மாதம் தீபாவளி பண்டிகை 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்கூட்டியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்ப தலைவிகள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கருத்தில் முன்கூட்டியே பெண்களுக்கான உரிமை தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. , வரும் 9 அல்லது 10ம் தேதிக்குள் வங்கிகளில் பணம் இருப்பு வைக்கப்படும் என கூறப்படுகிறது.