மதுரை சித்திரை திருவிழா.. 4 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்!
மதுரை சித்திரைத்திருவிழாவை ஒட்டி 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கு 23ம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Madurai Chithirai Festival
மதுரையில் வரும் 23-ம் தேதி பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. அதே தேதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டு வந்த தேர்வு தேதியை மாற்றம் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், 23ம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
School Exam
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்;- தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகளின்படி 2023-2024ம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
School Education Department
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1) யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024-ம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024-ம் தேதிக்கும் நடைபெறும் என இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
Exam date changed
தற்போது மதுரை மாவட்டத்தில் 23.04.2024 அன்று சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இயக்குநரின் அனுமதி பெற்று 23.04.2024 நடைபெறும் சமூக அறிவியல் தேர்வானது 24.04.2024 அன்று நடைபெறும் என அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.