ஐபிஎல் 2024 பீவர் ஓவர், சிஎஸ்கே, ஆர்சிபி இல்லை – வெறிச்சோடி காணப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 சுற்று போட்டி இன்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் சேப்பாக்கம் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Chennai Super Kings
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 22 ஆம் தேதி 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
Royal Challengers Bengaluru
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், முதல் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியோடு இந்த சீசனை தொடங்கியது.
Royal Challengers Bengaluru
இந்த தொடரில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. கடைசியாக பெங்களூருவில் நடைபெற்ற பிளே ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின.
CSK and RCB Elimination
இதில், சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து கடைசி அணியாக வெளியேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர்சிபி 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. மேலும், இந்த வெற்றியை ஆர்சிபி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடினர்.
IPL 2024
இதையடுத்து நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
IPL 2024, CSK and RCB
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோல்வி அடைந்து எலிமினேட்டருடன் வெளியேறியது. ஆர்சிபியின் தோல்வியை ராஜஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும், வீரர்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
Indian Premier League
இந்தப் போட்டியைத் தொடர்ந்து குவாலிஃபையர் 2 சுற்று போட்டி இன்னும் சற்று நேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. பொதுவாக சென்னையில் நடைபெறும் போட்டி என்றாலே சேப்பாக்கத்தை சுற்றிலும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், இன்றோ வெறிச்சோடி காணப்படுகிறது.
Chennai Super Kings and Royal Challengers Bengaluru
இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. சிஎஸ்கே அணிக்கு மட்டுமின்றி அந்த அணியிலுள்ள எம்.எஸ்.தோனிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். தோனியை பார்ப்பதற்காகவே நாடு முழுவதிலுமிருந்து ரசிகர்களின் வருகை இருக்கும். அப்படிப்பட்ட சிஎஸ்கே அணி இந்த சீசனில் 5ஆவது இடம் பிடித்து வெளியேறியது.
CSK and RCB
சிஎஸ்கே அணியை தொடர்ந்து பெங்களூருவில் அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எலிமினேட்டர் சுற்று போட்டியுடன் வெளியேறியது. இந்த 2 அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்களை விட மற்ற அணிகளுக்கு ரசிகர்கள் குறைவு தான். ஆதலால், இன்று நடைபெறும் குவாலிஃபையர் 2 சுற்று போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்களின் வருகை இல்லாமல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வெறிச்சோடி காணப்படுகிறது.