Relationship Horoscope: இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கனியும் காலமாம்...உங்கள் காதலி ராசி இதில் இருக்கா..?
Relationship Horoscope: இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கனியும் காலம் ஆரம்பமாம், இவர்கள் முரண்டு பிடித்தாவது தங்கள் காதலை ஓகே சொல்ல வைத்து விடுவார்களாம்.
astrology love
ஒவ்வொரு ராசிகளும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும். சிலருக்கு அனைவரையும், தன் பின்னால் சுற்றி வர செய்யும், காந்தம் போல் ஈர்க்கும் திறன் கொண்டிருப்பார்கள். அதிலும், குறிப்பிட்ட சில ராசிகள் மற்றவர்களை வசீகரிப்பதில், கில்லாடியாக இருப்பவர்கள், பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், இயல்பு, பேசும் விதம், வாழ்கை முறை போன்றவை முக்கிய காரணமாக இருக்கும்.
astrology love
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மற்றவர்களை காதல் ஓகே சொல்ல வைப்பதில் கீழே சொன்ன ராசிகள் மிகவும் கில்லாடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின்னாடி ஏகப்பட்ட ரசிகர்கள், சுற்றி வருவார்களாம். அவ்வாறு மற்றவர்களை வசீகரிக்கும் குணம் கொண்டவர்கள் துணிச்சலுடன் நடை போட்டு உயர்ந்த நிலையை அடைவார்கள். எந்தெந்த ராசிகள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்வோம்.
astrology love
மேஷம்:
ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை அதிகம் இருக்குமாம். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் இவர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்து கொள்வார்களாம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள். மொத்தத்தில், அவர்களுடன் வாழ்கை நடத்துபவர்கள் மிகவும் குடுத்து வைத்தவர்கள் ஆவார்கள்.
astrology love
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறையான குணம் கொண்டவர்கள். தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர்கள்.மற்றவர்களிடம், மிகுந்த மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாக பழகுபவர்களாகவும் இருப்பார்கள். தன்னை பிறர் உருகி உருகி காதலிக்கவைப்பதில் கில்லாடிகள் ஆவார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களை நோக்கி எப்போதும் கூட்டம் அலைமோதும். மிகுந்த புத்திசாலி குணம் கொண்டவர்கள் மற்றவர்களை தன் மீது பைத்தியமாக வைத்திருப்பார்களாம்.
astrology love
துலாம்:
அதிக அளவு வசீகரிக்கும் திறன் கொண்டவர்கள். இவரது பேச்சு, நடை போன்றவை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடின உழைப்பால் எளிதில் காதலை கனிய வைப்பார்கள்.தொழிலில் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார்கள். கடமை உணர்வுடன்,காதலையும் புரிந்துகொண்டு.சூழ்நிலைக்கு ஏற்ப முடிவை எடுப்பார்கள்.
astrology love
தனுசு :
காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஆயுள் முழுவதும் காதலிலேயே வாழ்வார்..அதாவது காதல் வெற்றி பெரும். மிகவும் இயல்பான குணம் கொண்ட தனுசு ராசி நபர்கள் எப்போதும், பிறரிடம் மகிழ்ச்சியாக பழகும் இயல்புடையவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும், முக்கியத்துடம் பெறுவார்கள். மற்றவர்களிடம் பார்வையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். எளிதில் காதலில் பிறரை வீழ்த்துவார்கள்.