Losliya: சோகத்தில் இருக்கும் லாஸ்லியா... இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் உருக்கமான பதிவு..!
Losliya: இலங்கையில் தற்போது, நிலவு வரும் பொருளாதார வீழ்ச்சி குறித்து சோகத்தில் இருக்கும் லாஸ்லியா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Losliya
இலங்கையில் செய்தி வாசிப்பாளராகவும், மாடலாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் லாஸ்லியா.இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
Losliya
அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் இலங்கை பாஷையால் ரசிகர்களை கவர்ந்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.
Losliya
பிக்பாஸிற்கு பிறகு, லாஸ்லியாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.
losliya
அவரது அப்பா இறப்பு பெரும் சோகத்தை கொடுத்திருந்தது, தற்போது அதில் இருந்து மீண்டு தனது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
losliya
இதை தொடர்ந்து இவர், கேரளா திரைப்படத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'கூகுள் குட்டப்பன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
losliya
இந்த திரைப்படத்தை தமிழில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
losliya
இதற்கு இடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறி அதிக போட்டோ ஷுட்கள் நடத்தில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
losliya
இலங்கையில் தற்போது, நிலவு வரும் பொருளாதார தட்டுப்பாடு நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதுகுறித்து வருத்தமாக இருக்கும் லாஸ்லியா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
losliya
அதில் லாஸ்லியா, நாங்கள் மோசமான போர்களை சந்தித்துள்ளோம், முதலில் எங்களை உறவுகளை இழந்தோம், சுனாமியை சந்தித்தோம், வெடி விபத்துகள் 2019ம் ஆண்டு நடந்தது, இதையடுத்து, கொரோனா பேரழிவு இப்போது பொருளாதார தட்டுப்பாடு.
losliya
இது எங்களுடைய தவறு இல்லை, நான் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் இதையெல்லாம் சந்திக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.