தடையை மீறி சின்மயிக்கு லியோ படத்தில் வாய்ப்பளித்தது ஏன்? லோகேஷ் கனகராஜ் அளித்த பளீச் பதில்
லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு டப்பிங் பேச பாடகி சின்மயிக்கு வாய்ப்பளித்தது ஏன் என்பது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.
Lokesh Kanagaraj, chinmayi
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18-ந் தேதி மாலையே அப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இது ஒருபுறம் இருக்க லியோ பட புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன.
Trisha, chinmayi
லியோ படத்தின் புரமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் அவர் லியோ படத்தில் உள்ள பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று தான் இப்படத்தில் அவர் சின்மயிக்கு வாய்ப்பளித்தது. பாடகி சின்மயி படங்களுக்கு டப்பிங் பேச டப்பிங் யூனியன் தடைவிதித்துள்ளது. அந்த தடையையும் மீறி சினிமயியை லியோ படத்தில் டப்பிங் பேச வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
vijay, Lokesh Kanagaraj, chinmayi
இதுகுறித்து அவர் கூறுகையில், என் படங்களுக்காக நான் ரொமான்ஸ் காட்சிகள் நிறைய எழுதமாட்டேன். அது எனக்கு வரவும் வராது. ஆனால் லியோ படத்திற்காக கொஞ்சம் நல்லா ரொமான்ஸ் காட்சிகளை எழுதி இருப்பதாக எனக்கே தோன்றியது. அந்த காட்சியில் விஜய், திரிஷா இருவருமே சூப்பராக நடித்திருந்தார்கள். அந்த காட்சிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக சின்மயியை டப்பிங் பேச வைக்க முடிவு செய்தேன்.
Chinmayi dub for trisha in leo movie
அவங்களுக்கு தடை விதிக்கப்பட்டது இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு என் வேலை முடியனும் அதற்காக அவங்களை அழைத்து பேச வைத்தேன். அவர் தன்னுடைய குரலால் திரிஷாவின் கேரக்டருக்கு உயிர் கொடுத்துவிட்டார். எல்லா மொழிகளிலும் திரிஷாவுக்கு அவர் தான் டப்பிங் பேசி உள்ளார் என லோகேஷ் கனகராஜ் கூறினார். தடையை மீறி தனக்கு வாய்ப்பளித்த லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் லலித்துக்கு சின்மயி எக்ஸ் தளம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... பவா செல்லதுரைக்கு முன்... ‘ஆள விடுங்க பாஸ்’னு சொல்லி பாதியிலேயே வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ