MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லியோ படத்தால் லாபமில்லையா? திருப்பூர் சுப்ரமணியம் செய்யும் உள்ளடி வேலையை வெளிச்சம் போட்டு காட்டிய லலித்

லியோ படத்தால் லாபமில்லையா? திருப்பூர் சுப்ரமணியம் செய்யும் உள்ளடி வேலையை வெளிச்சம் போட்டு காட்டிய லலித்

லியோ படத்தால் தங்களுக்கு லாபமே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 29 2023, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
lalit kumar, tiruppur subramaniam

lalit kumar, tiruppur subramaniam

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வந்தாலும், இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
vijay Lalit kumar

vijay Lalit kumar

மேலும் லியோ படத்தோடு வேறு எந்த படமும் வெளியாகாததால் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பமின்றி தான் அப்படத்தை திரையிட்டுள்ளதாகவும், லியோ படம் ஒரு வாரத்தில் 461 கோடி வசூல் என்று சொல்வதெல்லாம் ஹீரோவை திருப்தி படுத்துவதற்காக சொல்லப்படுவதாகவும் அது உண்மையில்லை எனவும் அவர் யூடியூப் பேட்டிகளில் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
leo producer Lalit kumar with vijay

leo producer Lalit kumar with vijay

இந்நிலையில், திருப்பூர் சுப்ரமணியத்தின் இந்த பேச்சுக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் போட்டுடைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “லியோ படத்தை 80 சதவீத ஷேர் கொடுத்தால் தான் வெளியிடுவோம் என்று சொல்வதெல்லாம் பொய். பெரும்பாலான தியேட்டர்களில் எப்போது வாங்கும் ஷேர் தொகையுடன் தான் வெளியிட்டுள்ளோம். வெறும் 42 தியேட்டர்களில் மட்டுமே 80 சதவீத ஷேர் கேட்டோம்.

44
Lalit kumar with thalapathy vijay

Lalit kumar with thalapathy vijay

திருப்பூர் சுப்ரமணியம் ஏன் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. அவர் தான் லியோ படத்தை கோவையில் வெளியிடும் விநியோக உரிமையை கேட்டார். ஆனால் நாங்கள் வேறொருவருக்கு விற்றுவிட்டோம். அதை மனதில் வைத்து தான் இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன். அதேபோல் லியோ படம் ஒரு வாரத்தில் 461 கோடி வசூலித்தது உண்மையான வசூல், அதில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.

அதேபோல் தனஞ்ஜெயனுக்கும் தனக்கும் இடையேயான பிரச்சனை குறித்து பேசிய லலித், அவர் தன்னிடம் வந்து நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படம் பண்ணுமாறு கேட்டதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் அதை மனதில் வைத்து அவர் பேசிக்கொண்டு இருப்பதாக லலித் குமார் கூறினார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Leo Success Meet: 'லியோ' வெற்றிவிழாவில் கலந்து கொள்ளும் தளபதி..! பாதுகாப்பு கோரி கடிதம்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved