முதன்முறையாக தன்னுடைய 3 பிள்ளைகளை அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, தன்னுடைய மூன்று பிள்ளைகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
KPY Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. அந்நிகழ்ச்சியில் தன்னுடைய ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும், புகழும் சேர்ந்து செய்த காமெடி அலப்பறைகள் அந்நிகழ்ச்சியை வேறலெவலில் ஹிட் ஆக்கியது.
actor Bala
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி அதன்மூலம் சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்க பயன்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்... பழங்குடியின மக்களுக்காக புது ஆம்புலன்ஸ்... பாரி வள்ளல் போல் வாரி வழங்கிய பாலாவுக்கு குவியும் பாராட்டுக்கள்
KPY Bala ambulance
கடந்த சில மாதங்களாக நடிகர் பாலா, தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார். முதலில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, அதையடுத்து மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தந்த அவர், அண்மையில் சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார்.
kpy bala gifted 3 ambulance
இந்நிலையில், அந்த மூன்று ஆம்புலன்ஸ் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தன்னுடைய மூன்று பிள்ளைகள் என குறிப்பிட்டுள்ளார் பாலா. அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த மதுரை முத்து, இப்படி ஒரு இதயம் கர்ணனுக்கு இருந்ததில்லை பாலாவுக்கு இருப்பதில் பெருமை என பாராட்டி பதிவிட்டுள்ளார். அதேபோல் விஜே ஆண்ட்ரூஸ், இதுக்காகவும் சேத்து சொல்றேன் தம்பி. உனக்கு இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் படங்கள் வரணும். அதன் மூலம் நீ இன்னும் நிறைய உதவிகள் செய்யனும் தம்பி என மனதார வாழ்த்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Arun Vijay: படிக்கும் போது அம்மா சொன்ன அந்த வார்த்தை! காதல் என்றாலே பயந்து நடுங்கிய நடிகர் அருண் விஜய் ஓப்பன்