கொஞ்சமா கிளாமர்.. அதைவிட அதிகமா அழகு.. ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சிலையென நிற்கும் சதா!
மகாராஷ்டிராவில் பிறந்து கடந்த 2002 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் சதா முஹம்மத் சையத் என்கின்ற சதா. கடந்த 21 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் நடித்து வருகிறார் சதா.
Tamil Actress Sadha
தேஜா என்ற இயக்குனர் இயக்கத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான ஜெயம் திரைப்படத்தை தமிழில் பிரபல இயக்குனர் ராஜா மோகன் இயக்கிய பொழுது, அந்த திரைப்படத்திலும் சதா தான் நாயகியாக நடித்திருந்தார், இதுதான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம்.
இந்தோனேசியாவில் செம என்ஜாய்மென்ட்.. அருவில் ஆட்டம்போட்ட பூங்குழலி - கண்கொட்ட மறந்த நெட்டிசன்கள்!
Actress Sadha Latest Photoshoot
தமிழிலும் முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவில் வரவேற்பை பெற்ற சதா, அதன் பிறகு மாதவனுடன் எதிரி, நடிகர் ஸ்ரீகாந்துடன் வர்ணஜாலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படம் இவருக்கு ஒரு மாபெரும் வரவேற்பை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.
Kollywood Actress Sadha
கடந்த 2007 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த சதாவிற்கு, அதன் பிறகு பெரிய அளவில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதனால் தனது நடிப்பை கிளாமரான ரோல்களுக்கு அவர் மாற்றிக்கொண்டார்.
Actress Sadha Latest Photos
அப்படி இருந்தும் அவரால் பெரிய அளவில் எந்த திரையுலகிலும் சோபிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல்வேறு மொழிகளில் அவர் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டார்ச்லைட் என்ற திரைப்படத்தில் நடித்த சதா, தற்பொழுது தெலுங்கு மொழியில் வெளியான அஹிம்சா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி வில்லன் ரெடி... அஜித்தை அடிக்க லியோ படத்தில் இருந்து ஆளை இறக்கிய மகிழ் திருமேனி!