விடாமுயற்சி வில்லன் ரெடி... அஜித்தை அடிக்க லியோ படத்தில் இருந்து ஆளை இறக்கிய மகிழ் திருமேனி!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் பற்றிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
Ajith, Magizh thirumeni
தடம், தடையறத் தாக்க, மீகாமன் போன்ற திரில்லர் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் நடிகர் அஜித்குமார் நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படாமல் உள்ளது.
Vidaamuyarchi
இடையே இப்படம் டிராப் செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த தயாரிப்பாளர். இது தங்களது பெருமைக்குரிய படமாக இருக்கும் என உறுதியளித்தார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் உறுதியாக தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜித்தும் உடல் எடையை குறைத்து இப்படத்திற்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்த ரஜினிகாந்த்! இதுதான் ரகசியம்
sanjay Dutt
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கேஜிஎஃப் படத்தில் வில்லனாக மிரட்டிய சஞ்சய் தத், அடுத்ததாக விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து விடாமுயற்சி பட வாய்ப்பும் கிடைத்துள்ளதால் அவரின் வில்லன் இமேஜ் மேலும் அதிகரித்துள்ளது.
Vidaamuyarchi Villain
விடாமுயற்சியில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியானால் அவர் அஜித்துடன் நடிக்கும் முதல் படமாக இது அமையும். இதுதவிர விடாமுயற்சி படத்தில் தமன்னா, திரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!