இந்தோனேசியாவில் செம என்ஜாய்மென்ட்.. அருவில் ஆட்டம்போட்ட பூங்குழலி - கண்கொட்ட மறந்த நெட்டிசன்கள்!
கேரளத்து பெண்ணான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக மலையாள படங்களில் நடித்து வந்த அவர் முதன் முதலில் விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
Actress Aishwarya Lekshmi
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கடந்த 2022ம் ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான Gargi என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். இந்த சூழலில் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருடைய புகழை வேறு ஒரு பரிமாணத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
குடும்பத்துடன் திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!
Actress Lekshmi in Indonesia
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் செல்லும் இடமெல்லாம் அவரை பூங்குழலி என்று கூறித்தான் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் மக்கள் மனதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actress Lekshmi in Indonesia
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு பிறகு பெரிய அளவில் அவர் படங்கள் நடிக்காத நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள கிங் ஆப் கோத்தா திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் பலரால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
Lekshmi in Indonesia
இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலிக்கு சென்று தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகின்றார். அங்கு அவர் அருவியில் ஆட்டம் போட்டது உள்பட பல நிகழ்வுகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜீவானந்தம் தான் ஈஸ்வரிய காதலித்தவன்.! குணசேகரனுக்கு தெரிய வரும் உண்மை! அடுத்து நடக்க போவது என்ன?