ஆளு யாருனு அடையாளம் தெரியுதா..? 42 வயதிலும் ஹாட்டான லுக்கில் டக்கர் போஸ் கொடுத்த விக்ரமின் ரீல் நாயகி அனிதா!
மும்பையில் பிறந்து ஹிந்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று. அண்மையில் நடிப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற நடிகை தான் அனிதா ஹசனந்தனி ரெட்டி.
Actress Anitha
கடந்த 1999ம் ஆண்டு, தனது 18வது வயதில் "தாள்" என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் களம் இறங்கிய நடிகை தான் அனிதா. தமிழில் இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படம்.
முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் ஜோடி - மனைவியோடு திருவண்ணாமலை சென்ற ஹரிஷ் கல்யாண்!
Actress Anitha Reddy
அதன் பிறகு பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம்.
Anitha Hassanandani
தமிழில் வருஷம் எல்லாம் வசந்தம், சாமுராய், சுக்கிரன், நாயகன் மற்றும் மகாராஜா உள்ளிட்ட 5 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.
Indian Actress Anitha
இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்த நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தற்பொழுது இவர் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.