- Home
- Gallery
- Chaitra Reddy: கொண்டாட்டத்தில் கலை கட்டிய 'கயல்' சீரியல் நடிகையின் வீடு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
Chaitra Reddy: கொண்டாட்டத்தில் கலை கட்டிய 'கயல்' சீரியல் நடிகையின் வீடு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, தன்னுடைய 29-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Chaitra Reddy Debut in Kannada serial:
கன்னடத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 'அவனும் மாத்தே சரவாணி' என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரபலமானவர் சைத்ரா ரெட்டி. இதைத்தொடர்ந்து தமிழில் கல்யாண முதல் காதல் வரை சீரியலில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் விலகிய பின்னர், சைத்ரா ரெட்டி இந்த தொடரில் இணைந்தார்.

Sun tv Serial Kayal:
பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். டிஆர்பிஎல் தொடர்ந்து டாப் 3 இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த சீரியலுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
சூர்யாவின் முக்கியமான படம்.. ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை - தயாரிப்பாளர் கொடுத்த ஸ்வீட் நியூஸ்!
top cooku dupe cooku contestant:
சீரியலைத்தொடர்ந்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டும் சைத்ரா ரெட்டி, ரஞ்சிதமே என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி, தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்.
Famous Serial Heroine:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே, இந்த நிகழ்ச்சியும் சமையல் மற்றும் காமெடியை அடித்தளமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளிலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சைத்ரா ரெட்டி, சமீபத்தில் தான் தனக்கு மிகவும் பிடித்த பென்ஸ் காரை வாங்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது கணவருடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின.
Samantha: என்ன டார்ச்சர் பண்ணுறா... பாடகி சின்மயியை கதற விட்ட நடிகை சமந்தா! அட்ராசிட்டி வீடியோ!
Chaithra Reddy 29th Birthday:
இதைத்தொடர்ந்து சைத்ரா ரெட்டி தன்னுடைய 29 வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இது குறித்த கியூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.